Monday 1 February 2016

11வது கரிசல் திரை விழா 2016: சிறப்பு விருந்தினர் அறிமுகம் - கதிரவன்

‘கோடை மழை’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் கதிரவன். முதல் படத்திற்கு முன் நடிகரும் இயக்குநருமான பிரபுதேவாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிவந்தார். யாழ் தமிழ்த்திரை என்ற பட நிறுவனத்தின் சார்பில் அலெக்சாண்டர் என்பவர் தயாரித்திருக்கிறார். புதுமுக நாயகன் கண்ணன் மற்றும் ‘கங்காரு’ படத்தில் நடித்த பிரியங்கா, இயக்குநர் களஞ்சியம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர்.

கதிரவனின் ‘கோடை மழை’ திரைப்படத்தின் தலைப்பு கோடைக்கால மழையைக் குறிப்பது அல்ல. கோடை – மழை என கோடை காலத்தையும் மழை காலத்தையும் குறிக்கும் இரண்டு தனிச்சொற்கள். இந்த இரண்டு வார்த்தைகளில் தான் படத்தின் கதையே உருவாகிறது. திரைப்படத்தில் நாயாகனாக நடித்துள்ள கண்ணன் ராணுவ வீரர். கோடைக்காலத்தில் ஒரு முறையும் மழைக்காலத்தில் ஒரு முறையும் என இரண்டு முறை தன் சொந்த ஊரான சங்கரன்கோவிலுக்கு வருகிறார் கதாநாயன். அப்போது, கதாநாயாகன் தன் வாழ்வில் நடக்கும் சம்வங்களையே திரைப்படமாக்கியுள்ளார் கதிரவன்.

திருநெல்வேலிக்காரான கதிரவனுக்கு திருநெல்வேலி மக்கள் ஒவ்வொருவரிடமும் உள்ளதைப்போலவே அதீத ஊர்பற்று உண்டு. பத்திரகையாளர்களிடம் ‘கோடை மழை’ படத்தைப் பற்றிப் பேசும் போது, ‘நான் சங்கரன்கோவிலில் பிறந்தவன். அங்கே பலர் ராணுவத்திலும், காவல்துறையில் பணியாற்றி வருகிறார்கள். அங்குள்ள மக்களின் கதையை பாடமாக்க நெடுநாட்களாக ஆசைபட்டேன். அந்த ஆசை ‘கோடை மழை’ படத்தின் வாயிலாக நிறைவேறுகிறது’ என்று கூறியிருக்கிறார் கதிரவன்.

நம்ம ஊரு பிள்ளையான இயக்குநர் கதிரவன் அவர்களின் வருகையால் 11வது கரிசல் திரை விழா பெருமிதம் அடைகிறது.

கதிரவன் பற்றி மேலும் அறிய,
'கோடை மழை' திரைப்படம் பற்றி
'கோடை மழை' திரைப்படத்தின் பாடல்கள்
-          Media Team, 11th Karisal Thirai Vizha 2016

No comments:

Post a Comment