Thursday 11 February 2016

11வது கரிசல் திரை விழாவில் சென்னை பல்கலைக்கழகம் முதலிடம்

11வது கரிசல் திரை விழாவில் வெற்றி பெற்ற சென்னை பல்கலைக்கழக மாணவ மாணவிகள்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழத்தில் நடைபெற்ற கரிசல் திரை விழாவில் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் ஒட்டுமொத்த கோப்பையைப் வென்றனர்.

வ.உ.சி.அரங்கில் நடைபெற்ற நிறைவு விழாவில் துறைத்தலைவர் பெ.கோவிந்தராஜு, கூட்டுக்குழு உறப்பினர்  ராதாகிருஷ்ணன் நாயர் மற்றும் பதிவாளர் ஜான் டி பிரிட்டோ, எழுத்தாளர் நாறும்பூ நாதன் ஆகியோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக பத்திரகையாளர் சமஸ் பங்கேற்று உரையாற்றினார்.

தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் ஒட்டுமொத்தக் கோப்பையைக் கைப்பற்றினர். பாளையங்கோட்டை துய சவேரியார் பள்ளி மாணவர்கள் இரண்டாவது இடம் பெற்றனர்.

விழாவில் பேசய பத்திரிகையாளர் சமஸ், ‘பத்திரிகையாளன் என்பவன், நாம் எங்கு இருக்கிறோம் என்பதைவிட எவ்வளவு சுதந்திரமாக இயங்குகிறோம் என்பது மிக முக்கியமானது. இதன் மூலமாகவே அவனால் மக்களுக்கு தேவையான செய்திகளை கொண்டு செல்ல முடியும்.  

தொழில்நுட்பம் படித்தவரும், இதழியல் படித்தவரும்  ஊடகங்களில் பணிபுரிகிறார்கள். இருவரையும் பிரித்துக் காட்டுவது என்பது ஆழ்ந்த வாசிப்பு மட்டுமே. ஆழ்ந்த வாசிப்பு என்பது ஒரு தியான நிலையைப் போன்றது. இதன் மூலமாகவே மனதை ஒருமுகப்படுத்தி நம்மால் இதழியல் துறையில் பணியாற்ற முடியும். இதை தவிர ஒருவரின் தன்னூக்கமிக்க செயல்பாடே அவரை தனித்த அடையாளமாக இருக்கும். 

பத்திரிகையாளர்கள் அனைத்து துறையிலும் வித்தகராக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. மாறாக தன் சுற்றுச்சூழலை நன்கு கவனித்து அதற்கு ஏற்ற வகையில் செயல்படவேண்டிய ஆர்வம் தான் அவசியம். இவைய அனைத்தையுமே புத்தக வாசிப்பு என்னும் தியானம் மூலம் பெற முடியும். 

ஆனால், இன்றைய காலத்தில் வாசிப்பு என்பதே அருகிவிட்டது என்று சொல்லிவிட முடியாது. உதாரணமாக, யாருடைய கையிலும் கடிகாரம் இல்லை என்பதற்காக மணி பார்க்கும் பழக்கமே ஒழிந்துவிட்டது எனச் சொல்ல முடியுமா? அதுபோலவே இன்றைய காலக்கட்டத்தில் துரித வாசிப்பு என்னும் பழக்கமே உள்ளது. இது முற்றிலும் தவிர்க்கப்படவேண்டிய ஒன்றாகும். 

ஒரு நிகழ்வை செய்தியாக மக்களுக்கு கொடுக்க கூடிய எவரும் செய்தியாளர் ஆகலாம். ஆனால், செய்தி மக்களுக்கான தேவை உணர்ந்ததாக இருக்க வேண்டும்.’ என்று கூறினார்.

-Media Team, 11th Karisal Thirai Vizha 2016

No comments:

Post a Comment